அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம்

🕔 July 8, 2017

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளனர் எனத் தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இறுதி தீர்மானத்தினை மேற்கொள்வர் எனவும் அறிய முடிகிறது.

அரசாங்கத்திலிருந்து விலகும் இவர்கள், நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவர் என்று கூறப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த அநியாயங்களுக்கு, ஆட்சியாளர்கள் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதனால், முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே,  அரசாங்கத்திலிருந்து விலகி, சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்பதில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்