ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

🕔 April 26, 2017

மைச்சர் பதவியை துறந்து விட்டு, ராணுவத் தளபதி அல்லது  அனைத்து படைகளின் தளபதி பதவியை இரண்டு வருடங்களுக்கு பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

நாட்டை ஒழுக்கப்படுத்துவதற்காகவே சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி இந்த வேண்டுகோளினை விடுத்ததாகவும் அமைச்சர் ராஜித மேலும் கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் ராஜித மேலும் தெரிவிக்கையில்;

“பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்த நாட்டில் நன்கு அறியப்பட்ட ஒழுக்கமான ஒருவராவார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதியின் வேண்டுகோளினை ஏற்றுள்ளார். முறையான அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் வழங்கும் பட்சத்தில், அமைச்சர் பதவியை துறந்து, தளபதி பதவியைினை ஏற்றுக் கொள்வதற்கு, சரத் பொன்சேகா தயாராக உள்ளார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்