பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு

🕔 April 22, 2017

சிம்பாவே நாட்டில் பாடசாலைக் கட்டணங்களை கால் நடைகளாவும் செலுத்த முடியுமென்று அந்த நாட்டின் கல்வியமைச்சர் லசாரஸ் டொகொரா தெரிவித்துள்ளார்.

சிம்பாவே அரசாங்கம் சார்பான ஞாயிறு தினசரியொன்றுக்கு, இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “பெற்றோர்களிடமிருந்து பாடசாலைக் கட்டணங்களை அறவிடுவதில் பாடசாலைகள் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். எனவே, பாடாசாலைக் கட்டணங்களை கால்நடைகளான ஆடு, மாடுகளாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டுமன்றி, பெற்றோர்கள் தமது உழைப்பு மற்றும் அறிவுசார்ந்த திறமைகளையும் தமது பிள்ளைகளின் பாடசாலைக் கட்டணங்களாகச் செலுத்த முடிவும்” என்றார்.

உதாரணமாக, பெற்றோருவர் மேசனான இருப்பாராயின் அவர் தனது மகனின் பாடசாலைக் கட்டணத்தை பணமாக செலுத்த முடியாத நிலையில், குறித்த பாடாசலைக்கு தனது மேசன் உழைப்பை கட்டணமாக வழங்க முடியும்.

இந்த நிலையில், ஏற்கனவே சிப்பாவேயிலுள்ள சில பாடசாலைகள், பெற்றோரிடமிருந்து கால்நடைகளை பாடசாலைக் கட்டணமாகப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளன என்று, அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்