அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்

🕔 April 22, 2017
– எஸ். ஹமீட் –

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான ஒரு மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க உளவியல் நிபுணர்கள் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமெரிக்கா மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட முழு உலகமும்  ஆடிப் போயுள்ளது.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய  பிரபல மனநல நிபுணர்களின் குழு சார்பில் உரையாற்றிய உளவியல் அறிஞர் ஜோன் கார்னர் என்பவர், அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான  உளவியல் நோயினால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது ஆட்சி நடாத்துவதாகக் கூறியுள்ளார்.

அத்தோடு,  ஜனாதிபதியாக டொனால்ட் ரம்ப் பதவியேற்ற நாள் தொடக்கம்  இன்றுவரை அவருடைய செயற்பாடுகள் மிகவும் அதிர்ச்சிதரத்தக்க வகையிலேயே  காணப்படுவதாகவும், இது மிகப் பயங்கரமான – ஆபத்தான மனநோய்க்கான அறிகுறியெனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிலைமையில் அவர் நாட்டை நிர்வகிப்பதென்பது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் கூறியிருக்கின்றார்.
அது மாத்திரமன்றி,  குறித்த மனநிலையில்  ஜனாதிபதி  ரம்ப் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்குமெனவும், நாட்டு  மக்களுக்கு ட்ரம்ப்  தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவது உளவியல் மருத்துவர்களான தமது தார்மீகப் பொறுப்பு எனவும் ஜோன் கார்னர் தெரிவித்துள்ளார்.

அறிஞர் ஜோன் கார்னரின் இந்தக் கூற்றுக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்