பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு

🕔 February 12, 2017

SLMC - Delg - 011– முன்ஸிப் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

மு.காங்கிரசின் தவிசாளர் தலைமை தாங்கி பேராளர் மாநாடுகளை நடத்துகின்றமைதான் அந்தக் கட்சியின் பாரம்பரியமாகும். ஆயினும், இம்முறை தவிசாளர் பதவிக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் இதுவரை கால பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில், மு.கா.வின் 27ஆவது பேராளர் மாநாடு நடைபெற்று வருகிறது.

பேராளர் மாநாட்டு மேடையில், கட்சியின் நிருவாக சபை உறுப்பினர்கள் சம்பிரதாயபூர்வமாக அழைத்து அமர வைக்கப்படுவர். அந்த வகையில், இம்முறை மு.கா.வின் நிருவாக சபைக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரசின் அடையாளங்களான எம்.ரி. ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர் இல்லாத நிலையில், இன்றைய பேராளர் மாநாடு நடைபெற்று வருகிறது.

கட்சியின் தலைவரான ரஊப் ஹக்கீமை கேள்வி கேட்கும் ஆளுமையுள்ள ஹசனலி மற்றும் பசீர் ஆகியோரை மிகவும் திட்டமிட்டு, கட்சியிலிருந்து ஓரங்கட்டி விட்டு, முழுமையானதொரு சர்வதிகாரியாக இன்றைய பேராளர் மாநாட்டினை ஹக்கீம் நடத்துகின்றார் என்று, கட்சியின் உயர்பீடத்தவர்களே விசனம் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இன்றைய பேராளர் மாநாட்டுக்கு வெளிப் பிரதேசங்களிலிருந்து மிகச் சொற்பமானோரே வருகை தந்துள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றைய பேராளர் மாநாட்டுக்கு சிங்கள மற்றும் முஸ்லிம் பெண்களும் வருகை தந்திருந்ததோடு, அவர்கள் பார்வையாளர்களின் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக, கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண உறுப்பினர்கள், ஹக்கீமுடைய அமைச்சில் முக்கிய பதவிகளில் உள்ளோர்தான் இன்றைய பேராளர் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்து வந்துள்ளனர்.SLMC - Delg - 022 SLMC - Delg - 044 SLMC - Delg - 055 SLMC - Delg - 066

Comments

புதிது பேஸ்புக் பக்கம்