உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

🕔 January 31, 2017

Faizer musthafa - 011ள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னரே நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவின் தலைமையில், தேர்தல் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், எல்லை மீள்நிர்ணய அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மொழிபெயர்ப்பு மற்றும் தொழிநுட்ப தவறுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, அவற்றை சீர்திருத்திய பின்னரே தேர்தலுக்கு செல்லமுடியுமெனவும்  சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஏப்ரல் மாத்திற்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுமென கடந்த வருட இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்