பண்டாரநாயக்க விமான நிலையம், மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது: அமைச்சர் நிமல் அறிவிப்பு

🕔 December 22, 2016
– அஷ்ரப் ஏ சமத் –

ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  ஜனவரி 06ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05ஆம் திகதி  வரையிலான  03 மாதங்களுக்கு  மூடப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமா சேவைகள் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தாா்.

ஓடுபாதைகள் விஸ்தரிப்பு நிர்மாணத்தின் பொருட்டு தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் விமான நிலையம் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிப்பு வேலைத்தளத்துக்கு இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்கள்  அழைத்துச்   செல்லப்பட்டதோடு,  அங்கு  சீனக்கம்பனி ஊடாக  நிர்மாணிக்கப்படும் மேலதிக ஓடுபாதைகள் பற்றி  ஊடகவியலாளா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமைச்சா் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சா் அசோக் அபேசிங்க ஆகியோர் கலந்து கொண்ட  ஊடகவியலாளர் சந்திப்பொன்றும்  இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“இலங்கை விமான நிலையத்தின் ஓடுபாதைக்கான தரச் சான்றிதழை, சர்வதேச இந்த ஆண்டுக்கு மட்டுமே  விமான போக்குவரத்து நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விமான நிலையத்தில் 360 ஆசனங்களைக் கொண்டதொரு விமானத்தினை தரையிறக்க முடியாது.

1986ல் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதையே இங்கு  உள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் ஓடுபாதைகளை திருத்தியமைக்கவில்லை.

விமான நிலையம் மூடப்படும் காலப்பகுதியல், இந்த விமான நிலையத்தினூடாக பயணிப்பவர்கள், 05 மணித்தியாலயத்துக்கு முன்பே விமானநிலையத்திற்கு வருதல் வேண்டும். சில விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் இருந்து செயற்படுத்தப்படும். சில விமானங்கள் இங்கு ஆசனங்கள் நிரப்பட்டு மத்தளயில் இரண்டு மணித்தியாலயங்கள் தரித்து நிற்கும். விமான நிலையத்துக்கு வருபவா்களின் வாகனங்கள், மற்றும்  வழியனுப்ப வருபவா்களின் தொகை மட்டுப்படுத்தப்படும்.

இந்த மேலதிக ஓடுபாதை நிர்மாணத்துக்காக  சீன கம்பனியின் உள்ளுா் தொழிலாளிகள் 350 பேர் பயன்படுத்தப்படவுள்ளனா். இதற்கான கலவைகள் உள்ளுராிலும் சீனாவிலும் பெற்றுக் கொள்ளப்படும். இத்திட்டத்துக்காக 7.2 பில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.

இந்த மூன்று மாதத்திற்கும், ஸ்ரீலங்கா விமானம் 16 விமான போக்குவரத்துக்களையும், சர்வதேச  விமனங்கள் 04 போக்குவரத்துக்களையும் இடை நிறுத்தியுள்ளன. தற்பொழுது ஒரு நாளைக்கு 170 விமானங்கள் இலங்கைக்கு வந்து செல்கின்றன. இதில் 75 ஸ்ரீலங்கா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாளைக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  25 ஆயிரம் போ் வந்து போகின்றனா்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படும் காலத்தில் மத்தள விமான நிலையம் மற்றும் ரத்மலான விமான நிலையங்கள் பயன்படுத்தப்படும். இதன்போது பிரயாணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். இருந்தும் சர்வதேச விமான நிறுவனங்கள் எமது நாட்டு விமான நிலையத்தின் ஓடு பாதைகளை திருத்துமாறு, கடந்த 10 வருடங்களாக இலங்கை விமான அதிகார சபைக்கு தெரிவித்துள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்