சோ மரணம்

🕔 December 7, 2016

so-ramasami-00001துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியரும் தென்னிந்தியாவின் பிரபல நடிகருமான சோ என அறியப்படும் சோ. ராமசாமி இன்று புதன்கிழமை உயிரிழந்தார்.

சுகயீனம் காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையின் ஊடாகவும்,  நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்து புகழ் பெற்றார்.

சோ ராமசாமி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பதேடு, அவரின் சிறந்த ஆலோசகாகவும் இருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், சோ. ராமசாமி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்