பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம்

🕔 December 7, 2016

fartha-issue-01111– அஸீம் கிலாப்தீன் –

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் பற்றி அறிந்துகொண்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் இதுதொடர்பில் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக பதில் கல்விப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு நிலைமையை கூறியுள்ளார்.

இதனையடுத்து, புதன்கிழமையிலிருந்து பரீட்சை எழுத வருகை தரும் முஸ்லிம் மாணவிகளை, பெண் பரிசோதகர் ஒருவர் மூலர் பரிசோனை செய்த பின்னர், பரீட்சை எழுதுவதற்கு அனுமதிப்பதாக முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக பதில் கல்விப் பணிப்பாளர் வாக்குறுதியளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜமால்தீன் ரிசாம் ஆகியோருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் கூறினர்.

இதேவேளை, இந்த சம்பவம் பற்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முல்லைத்தீவு கிளையின் செயலாளர் மற்றும் பரீட்சை திணைக்களத்தின் பிரதி ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்