இந்தியா – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் ஜெயலலிதாவுக்குகு மாரடைப்பு ஏற்பட்டமையினையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்படுவதை அடுத்து, இந்தியப் பிரதமர் மோடி – நாளை திங்கட்கிழமை சென்னை வருகிறார் என அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழக ஆளுநரும் சென்னை வரவுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.
இதேவேளை, ஜெயலலிதாக உடல் நலம் பெற வேண்டுமென, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிராத்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.



