கிழக்கு மாகாணத்துக்கான மருந்தாளர் நியமனத்தில் குழப்பம்

🕔 November 9, 2016

naseer-0222– சப்னி அஹமட் –

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருந்தாளர்களுக்கான நியமனக்கடிதம் இன்று புதன்கிழமை பிற்பகல் வழங்கப்படவிருந்த நிலையில், நியமனக் கடிதங்களை வழங்குவதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசாங்கத்தினால் புதிதாக 480 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு மாகாணத்தில் 56 மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், 19 பேர் மாத்திரம் கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் 19 மருந்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும்,  தற்பொழுது வைத்தியசாலைகளில்  கடமையாற்றி வருகின்ற 17 மருந்தாளர்கள் வௌி மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

புதிதாக நியமிக்கப்படவுள்ள 19 பேரில் 17 பேர், வௌிமாவட்டங்களுக்கு செல்லவுள்ள மருந்தாளர்களின் வெற்றிடத்திற்கே நியமிக்கப்படவுள்ளனர். அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் புதிதாக இரண்டு பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இது தொடர்பிலான உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், மத்திய அரசின் பிரமுகர்களுடன் பேசப்பட்டு சிறந்த தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் புதிதாக நியமனம் பெறுவதற்க வருகை தந்த மருந்தாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது  தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வைத்தியசாலைகளில் மருந்தாளர்கள் இல்லாமையினால், சிற்றூழியர்கள் மருந்துகளை வழங்கி வருவதாக   நோயாளர்கள் முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றன. இவ்வேளையில் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர்களை நியமிக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இருந்த போதிலும் புதிதாக நியமிக்கப்படவுள்ள மருந்தாளர்களுக்கு நியமனம் வழங்கும் வேளையில், தமக்கு சொந்த இடங்களுக்கு செல்வதற்கான  விடுவிப்புக் கடிதங்களை வழங்குமாறும், கிழக்கு மாகாணத்தில் கடமையிலுள்ள மருந்தாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.naseer-0111

Comments

புதிது பேஸ்புக் பக்கம்