தையிட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஆயுதக் கழிவுப் பொருட்கள்
🕔 November 10, 2016



உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் ராணுவத்தினரால் கைவிடப்பட்டு நிலையில், அகற்றப்படாத அதிகளவான ஆயுதக் கழிவுப் பொருட்கள் சிதறி காணப்படுகின்றன.
26 வருடங்களின் பின்னர் சொந்த இடங்களைப் பார்வையிட்ட தையிட்டி மக்கள், தற்போது அப்பகுதியில் மீள்குடியேறி வருகின்றனர்.
இவ்வாறு குடியேறியவர்கள் விவசாய செய்கையில் ஈடுபட ஆரம்பித்துமுள்ளனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் காணப்படும் ஆயுத இரும்புக் கழிவுகளை சேர்க்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.




Comments

