ஒலுவில் கடலரிப்பு: தற்காலிக தடுப்பு நடவடிக்கை நிறைவு; நிலையான தீர்வைக் காணுமாறு மக்கள் கோரிக்கை

🕔 November 4, 2016

oluvil-011–  முன்ஸிப் அஹமட் –

லுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினைக் கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக தடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக – கடலரிப்பினை கட்டுப் படுத்துவதற்குரிய நிரந்தரத் தீர்;வினையும் உடனடியாக செயற்படுத்துமாறு, அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பபட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு, அவ்வப்போது – சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும், கடலரிப்பின் தீவிரம் குறையடையாத நிலையிலேயே காணப்பட்டது.

இதன் காரணமாக, பெருமளவான நிலப்பரப்பு கடலினால் காவுகொள்ளப்பட்டதோடு, அங்கிருந்த தென்னந்தோட்டங்கள் மற்றும் மீனவர் வாடிகள் என, ஏராளமான சொத்துக்களும் அழிவடைந்தன.

இதனையடுத்து, கடலரிப்பினைத் தடுக்கும் வகையில், பாரியளவான பாறாங்கற்களை கரையில் இடும் நடைவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது, இந்தச் செயற்பாடு நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, கடலரிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதற்காக, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் 17 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த நடடிக்கையானது கடலரிப்பினைக் கட்டுப்படுத்தும் தற்காலிகத் தீர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தடுப்பு நடவடிக்கை தொடர்பில், ஓரளவு திருப்தியினைத் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பின் காரணமாக, கடலுக்குள் மூழ்கிப் போயிருந்த களியோடை வடிச்சல் ஆறு, தற்போது மீளவும் வெளித் தெரியத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி, ஒலுவில் பிரதேசத்தின் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வொன்றினை காணும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(படங்கள்: றிசாத் ஏ காதர்)oluvil-033 oluvil-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்