தேவையான உணவை எழுதிக் கேட்கிறார் ஜெயலலிதா; செயற்கை சுவாச கருவிகளும் அகற்றப்பட்டுள்ளன
இந்தியாவின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, தற்போது தனக்கு தேவையான உணவை எழுதிக்கேட்டு வாங்கி சாப்பிட்டு வருகிறார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த மாதம் 21ஆம் திகதி கடைசியாக அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து அடுத்த 04 நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு லண்டன் டொக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பிசியோதெரிபி நிபுணர்கள்மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேவேளை, கடந்த நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவந்த ஜெயலலிதா, நேற்று வியாழக்கிழமை வைத்தியசாலையின் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகளும் அகற்றப்பட்டுள்ளன.