தலைப்புச் செய்திகள்

அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

Helicopter - 099

ஹெலிகொப்டர் ஒன்று, நுவரெலியா – கட்டுமான பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மரக்கறித் தோட்டமொன்றிலேயே இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டது.

அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸ, நவீன் திஸாநாயக்க மற்றும் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் இந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர்.

கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையினால், தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டமை காரணமாகவே, குறித்த ஹெலிகொப்டர் இவ்வாறு அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.

நுவரெலியா நகர மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காகவே, இவர்கள் வந்துள்ளனர்.

இவ்வாறு தரையிறங்கிய அமைச்சர்களை, பின்னர் கார் ஒன்றில் நுவரெலியா நகர மண்டபத்துக்கு அனுப்பி வைத்ததாக, நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் ஜி. விமலதாஸ தெரிவித்தார்.Helicopter -978