கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு

🕔 July 21, 2016

Uthumalebbe - 0148கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை, சபையின் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக, எம்.எஸ். உதுமாலெப்பையின் பெயரை, சபைத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரான உதுமாலெப்பை, ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு, கிழக்கு மாகாணசபைக்கு தெரிவானார்.

முன்னதாக, கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவியை வகித்த இவர், ஆட்சி மாற்றத்தின் பின்னர், அமைச்சுப் பதவியினை இழக்க நேரிட்டது.

ஆயினும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு.முன்னணியுடன், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக அண்மையில் இணைந்ததையடுத்து, அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பானவர்களுக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்