சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல்

🕔 July 21, 2016

Nalin fernanando - 097தொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டு தொடர்பில், லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது, எதிர்வரும் 28ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்