மீள் குடியேறும் மக்களுக்கான வதிகளை வழங்கும் செயலணிக்கு, அமைச்சர் றிசாத் நியமனம்

🕔 July 7, 2016

Rishad - 075யாழ்ப்பாணத்தில் இருந்து 1980 களின் பின்னர் வெளியேறிய முஸ்லீம் குடும்பங்களை, மீண்டும் அங்கு மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இதேபோன்று, அங்கிருந்து வெளியேறிய சிங்கள குடும்பங்களும் மீள் குடியேற்றப்படவுள்ளன.

அவ்வாறு குடியேறும் குடும்பங்களுக்கான வீடுகள் மற்றும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணியின் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க அமைச்சர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க,  16,120 முஸ்லீம் குடும்பங்களும் 5543 சிங்களக் குடும்பங்களும் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்