மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம்

🕔 July 7, 2016

Chandrika+Mahinda - 01ஹிந்த ராஜபக்ஷ்வின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமையைப் பறிப்பதற்கான தீர்மானத்தை அந்தக் கட்சியின் மேலிடம் எடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க தலைமையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் இத்தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவை இம்மாத முடிவிற்குள் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கை குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

சு.கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் பங்கேற்ற இந்த ரகசியக் கூட்டத்தில், மகிந்தவுக்கு தற்போது ஆதரவளித்து வரும்  ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  மீதும், ஒழுங்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டம் குறித்தும், அதில் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்தும் வெளிவந்திருக்கும் தகவல்களை – சு.கட்சியின் பொதுச் செயலாளர் இன்று வியாழக்கிழமை மறுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்