பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

🕔 July 7, 2016

Mahinda - 059முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிரணியினுடைய நிழல் அமைச்சரவையின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல் அமைச்சரவையொன்றை, இன்று வியாழக்கிழமை நிறுவினர்.

இதன்போது, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் புத்தசாசன நடவடிக்கைகளுக்கான அமைச்சராகவும் தெரிவானார்.

நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும், டளஸ் அழகபெரும கல்வியமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்