இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை

🕔 July 1, 2016

Hakeem - 012ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட, மௌலவி ஏ.எல்.எம். கலீலை மீண்டும் உச்ச பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் உச்சபீட செயலாளர் மன்சூர் ஏ காதிர் அறிவித்துள்ளார்.

கட்சியின் உயர்பீட உறுப்பினரான மௌலவி கலீல், மூன்று உச்சபீட கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால், அவர் – உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

எனினும், தான் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு மௌலவி ஏ.எல்.எம். கலீல் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமையவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையிலும், மேற்படி தீர்மானத்தை தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளதாக மன்சூர் ஏ காதிர் கூறினார்.

இதன்படி, எதிர்வரும் உயர்பீடத்தின் தீர்மானம் மௌலவி ஏ.எல்.எம்.கலீலுக்கு அறிவிக்கப்படும் எனவும் செயலாளர் மன்சூர் ஏ காதிர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்