பிரதமர் ரணில் தென்கொரியா சென்றடைந்தார்

🕔 May 28, 2016

Ranil  - 109பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்கொரியாவை சென்றடைந்துள்ளார்.

தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

‘தகவல் தொழில்நுட்ப துறையில் உயரிய அபிவிருத்தி மற்றும் கலாசார ரீதியில் வரலாற்று ரீதியாக இணைந்த கொரியாவின் தற்போதைய அபிவிருத்தி’ என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

160 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட றோட்டரி கழக பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஷேட உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்