இலங்கையினூடாக சூறாவளியொன்று பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூறாவளிக்கு ‘ரோனு’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதனால் மேற்கு , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றன.
இதேவேளை, மழை பெய்யும் பிரதேசங்களிலும் கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக கடலில் பிரயாணம் செய்வோர், மீன்பிடிக்காக கடலுக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.



