மாயமான எகிப்திய விமானம், வெடித்துச் சிதறியதாகத் தகவல்

🕔 May 19, 2016

பிரான்ஸ் தலைநகர் பரீஸிலிருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாயமானதாகக் கூறப்பட்ட எகிப்து எயார் விமானம், வெடித்துச் சிதறியதாக எகிப்திய தெரிவிக்கப்படுகிறது.
EgyptAir - plane - 09811

MS 804 எனும் இந்த விமானம் எகிப்தின் தலைநகர் கெய்ரோ நோக்கி இருந்து 59 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

எகிப்து வான்வெளியில் சுமார் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இரவு 2.45 மணியளவில் விமானம் ராடர் தொடர்பிலிருந்து இல்லாமல் போனது.

அதிகாலை 03 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் தரையிறங்காததால், அதனைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த விமானம் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்