சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்; அம்பலமாக்குகின்றார் மங்கள

🕔 October 19, 2015
Shiranrhi rajapaksha - 012முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிகை அலங்காரக் கலைஞருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கருத்து வெளியிடுகையில்;

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ராஜதந்திர நடைமுறைகளை மீறி, அரசுக்கு நெருக்கமான அனைவருக்கும் ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் சுமார் 2800 பேருக்கு அவ்வாறு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய ராஜதந்திர சேவையைக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசாங்கத்தினால் கூட, இந்தளவு பெரிய தொகையில் ராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்படவில்லை.

இதில் ஷிரந்தி ராஜபக்சவின் சிகை அலங்கார நிபுணருக்கும் கூட, ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்