சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு

🕔 February 13, 2019
சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் மற்றும் தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்களை வழங்கப்பட்டன.

கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், இன்று புதன்கிழமை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கிழக்கு ஆளுநரின் செயலாளர் அஸங்க அபேவர்தன, சுகாதார மாகாண அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், சிறுவர் பராமரிப்பு சேவை திணக்களத்தின் உதவி ஆனையாளர் திருமதி ச. சுதர்ஷன் , சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீவான்கி, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ரயீஸ்டீன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Comments