இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு

🕔 December 7, 2018

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்படுகத்தியிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றமையினால், இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு டிசம்பவர் 07ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதிப்பதாக, நொவம்பர் 13ஆம் திகதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில் மேற்படி வழக்கு விசாரணைகள் 07 நீதியரசர்கள் முன்னிலையில் 04ஆம் திகதி முதல், தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

எனவே, மேலும் வழக்கு விசாரணைகள் உள்ளமையினால், நாளை 08ஆம் திகதி வரை, இடைக்காலத் தடையினை நீடிப்பதாக உச்ச நிதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த இடைக்காலத் தடையை 10ஆம் திகதி வரை நீடிப்பதாக, நீதிமன்றம் இன்று மீண்டும் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்