அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு

🕔 November 20, 2018

டிதடி, சண்டைகளுடன் நிறைவடைந்த, கடந்த வாரத்தின் மூன்று நாடாளுமன்ற அமர்வுகளையும் நடத்துவதற்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் (08 கோடி) செலவாகியதாக, நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வொன்றினை நடத்துவதற்கு 25 மில்லியன் ரூபாய் (இரண்டரைக் கோடி) செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் 95 அமர்வுகளுக்காக, 2450 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் அடிதடி மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் நிறைவடைந்த 03 நாடாளுமன்ற அமர்வுகளையும் நடத்துவதற்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அமர்வுகளின் போது, உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அங்கிருந்த தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, நாடாளுமன்றத்துக்குரிய தளபாடங்களை சேதப்படுத்தியமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.

இதற்கு நேற்றைய சபை அமர்வுக்குத் தலைமை  தாங்கிய பிரதி சபாநாகர் பதிலளிக்கையில்; கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி, நாடாளுமன்ற சொத்துக்களைச் சேதப்படுத்திய உறுப்பினர்களின் பெயர் விபரங்களை, நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்குமாறு கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்