ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள்

🕔 February 23, 2018

நாட்டிலிருந்து 54 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த 03 இந்தியர்கள் நேற்று வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் மதுரை நகருக்கு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் விமானத்தில் இவர்கள் பயணிக்கவிருந்தனர்.

இவர்களிடமிருந்து 10 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் நிறை 916.25 கிராமாகும்.

இவர்கள் தமது பயணப் பைகளில் குறித்த தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போதே, கைது செய்யப்பட்டனர்.

மேற்படி நபர்கள் 52, 52 மற்றும் 48 வயதுடைய ஆண்களாவர்.

Comments