காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது

🕔 February 11, 2018

– முன்ஸிப் –

காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி, அங்குள்ள 10 வட்டாரங்களையும் வென்றெடுத்துள்ளது.

ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வழி நடத்தலில், சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் அங்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் தராசு சின்னத்திலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டிருந்தன.

ஆயினும், காத்தான்குடி நகரசபைக்கான 10 வட்டாரங்களையும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புலாவின் வழி காட்டுதலில் களமிறங்கிய, சுதந்திரக் கட்சியே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments