தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை

🕔 February 8, 2018

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் கடமைகளில் 65,658 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

13,420 மத்திய நிலையங்களில் 26,840 பொலிஸார் கடமையாற்றவுள்ளதாகவும், ஒரு மத்திய நிலையத்துக்கு 2 பொலிஸார் வீதம் கடமைகளில் ஈடுபடுவரெனவும் அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரங்கள் நிறைவந்தை நிலையில், இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளில் கூட ப​தாதைகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட எதனையும் காட்சிப்படுத்துவதற்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் ஒரேயொரு கட்சிக் கொடியை பறக்க விடுவதற்கு  தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரையும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்