கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை

🕔 January 9, 2018

டற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி. தசநாயக்கவும், அவருடன் ஐந்து பேரும் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவினை வழங்கியுள்ளது.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டு  காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் தசாநாயக்கவும், அவருடன் 05 பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையிலேயே, மேற்படி 06 பேரினையும், தலா ஒரு லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் திகதி டி.கே.பி.தசநாயக்கவை, குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்