அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்

🕔 December 22, 2017

ஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்குகிறது.

1900 ஆண்டின் ஆரம்பத்தில் அஸ்பெட்டாஸ் சுரங்கத்தினுள் வேலை செய்த பணியாளர்கள், அதிகளவில் இறந்தமையினை அடுத்து, அஸ்பெட்டாஸுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அஸ்பெட்டாஸிலிருந்து உருவாகும் துகள்கள், நுரையீரலில் படியும் போது – புற்று நோய் உருவாவதாக, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு இலங்கை – தடை விதித்திருந்தது. ஆயினும், இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யா தடை விதித்தமையினை அடுத்து, அந்தப் பிரச்சினையினை தீர்க்கும் பொருட்டு, ரஷ்யாவிலிருந்து அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதற்கான தடையினை இலங்கை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ரஷ்ய அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கான இறக்குமதித் தடை நீக்கம்; தேயிலை வியாபாரத்துக்காக, பலி கொடுக்கப்படும் மக்கள் நலன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்