மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

🕔 December 8, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 61 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அவர்களின் பாதுகாப்புக்காக போதுமனளவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகள் எவையும் விடுக்கப்படவில்லை என்றும், அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இருந்தபோதும், மேற்படி இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என, புலனாய்வு பிரிவினர் அறிவிப்பார்களாயின், மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட விடயங்களை பிரதமர் கூறினார்.

எதிர்வரும் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அவரின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு நாடாளுமன்றில், தினேஷ் குணவர்த்தன கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்