சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

🕔 October 27, 2017

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான குழு,  இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது.

மேலும், சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்துதல் மற்றும் அம்பாறை நகர சபையை மாநகரசபையாக தரமுயர்துதல் தொடர்பிலும் பொதுமக்களிடமிருந்து மேற்படி குழு கருத்துக்ளையும் முன்மொழிவுகளையும் கோரியுள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் நொவம்பர் மாதம் 10 திகதிக்கு முன்னதாக, சாய்ந்தமருது புதிய பிரதே சபையை உருவாக்குதல் மற்றும் அம்பாறை, சம்மாந்துறை சபைகளைத் தரம் உயர்த்துதல் தொடர்பில் கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் பொதுமக்கள் சமர்ப்பிக்க முடியும்.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிய சபைகளை உருவாக்குதல் தொடர்பான புதிய கருத்துக்களையும் மேற்படி குழு கோரியுள்ளது.

அது தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் நொவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம்.

சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் அம்பாறை சபைகள் தொடர்பான கருத்துக்களை; தலைவர், மாவட்டக் குழு – அம்பாறை, மாவட்ட செயலகம் – அம்பாறை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிய சபைகளை உருவாக்குதல் தொடர்பில் புதிய கருத்துக்களை; தலைவர், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான குழு, மாவட்ட செயலகம் – அம்பாறை எனும் முகவரிக்கு அனுப்ப முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்