கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

🕔 October 5, 2017

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

குறித்த மாகாணசபைகளின் பதவிக் காலங்கள் முடிவுள்ள நிலையில், இவ்வாறு அந்த சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளமையானது, சட்ட விரோதமான செயற்பாடாகும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாகாண சபைகளுக்குரிய கணிசமான பொருட்களை அவர்கள் கையளிக்கவில்லை என்றும், அரசியல் நடவடிக்கைகளுக்கான இவற்றினை அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் கபே குறிப்பிட்டுள்ளது.

மாகாணசபைகளின் நிருவாகம், ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவற்றின் சொத்துக்களை இவ்வாறு பயன்படுத்துகின்றமையானது, தண்டனைக்குரிய குற்றம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்