மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

🕔 June 28, 2017

மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டு முஸ்லிம் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அன்றைய தினம் குறித்த சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியன்மார் நாட்டை சேர்ந்த 30 முஸ்லிம் அகதிகள், வடக்கு கடலில் கைது செய்யப்பட்டு, தற்போது மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 22 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த யுவதியை சிகிச்சை முடிந்து அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கொஹூவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்