விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

🕔 September 27, 2016

mahindananda-aluthgamage-014விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார்.

50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், இவர் விடுவிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது விசாரணைகள் நிறைவுபெறவில்லை எனத் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயினும், நீதவான் பிணையினை வழங்கினார்.

இதேவேளை, மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான வழக்கொன்றும் இன்றைய தினம், கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் எடுக்கப்பட்டது.

மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் மற்றுமொருவர் இவ் வழக்கு தொடர்பில் எதிராளிகளாக ஆஜராயினர்.

இந்த வழக்கிலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், அவர் விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்