பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம்

🕔 December 13, 2016

driving-girl-0232போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனமோட்டிய – பிரபல அசியல்வாதி ஒருவரின் மகளை பொலிஸார் துரத்திப் பிடித்து குற்றப்பத்திரம் வழங்கிய சம்பவமொன்று கடந்த ஞாயிறுக்கிழமை இடம்பெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, டிபென்டர் வாகனமொன்று கொழும்பு – கண்டி வீதியில் கண்டியிலிருந்து வேகமான பயணித்தது. இதன்போது குறித்த வாகனம் வெள்ளைக்கோடுகள் உள்ள பகுதியில் வாகனங்களை முந்திச் சென்றதோடு, மேலும் பல வகையான போக்குவரத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது.

இதனைக் கவனித்த நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார், குறித்த டிபென்டர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.

ஆயினும், குறித்த டிபென்டர் வாகனம் – பொலிஸாரின் கட்டளையினையும் மீறி, தொடர்ந்தும் பயணித்தது.

இதனையடுத்து, டிபென்டர் வாகனத்தை, தமது வாகனம் மூலம் பொலிஸார் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை விரட்டிச் சென்று பஸ்ஸியால பிரதேசத்தில் வைத்து பிடித்தனர்.

இதன்போது, வாகனத்தை ஓட்டியவர் ஒரு வந்த யுவதி என்பதை பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டனர். அந்த யுவதி –  தான் பிரபல அரசியல்வாதியின் மகள் எனத் தெரிவித்திருந்தார்.

இருந்தபோதும், வானனத்தை செலுத்திய யுவதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டு, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தினை வழங்கிய பொலிஸார், அவரை, அத்தனகல நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்