நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு

🕔 May 10, 2016

Raining - 01நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் மழை பெய்யும் போது கடும் காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் – இடி, மின்னலில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகின்றமையினால், மழையினை மக்கள் பெரிதும் எதிர்பாக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்