ராஜபக்ஷவினரின் கறுப்புப் பணத்தில் பத்திரிகை; பசில் பொறுப்பு

🕔 May 4, 2016

Mahinda + Basil - 0122முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடகப் பிரிவினால் வார இறுதிப் பத்திரிகையொன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திட்டத்தின் கீழ் இந்தப் பத்திரிகை வெளிவரவுள்ளது.

இரிதா எனும் பெயரில் வெளியாகவுள்ள இந்தப் பத்திரிகைக்கான முதலீட்டினை ராஜபக்ஷவினர் – வேறு நபர்களின் பெயரில் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பிலவின் கீழ் இயங்கி வந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடக பிரிவானது, உடன் அமுலுக்கு வரும் வகையில் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதற்கமைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்காக –  ஊடகங்களுக்கு செவ்வி வழங்குதல், மின்னஞ்சல் அனுப்புதல், அச்சிடல் நடவடிக்கைகளை மேற்கொள்தல், இணையதள மற்றும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கையாளுதல் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகள் அனைத்தும் பசில் ராஜபக்சவின் கீழ் நடைபெறவுள்ளன.

அத்துடன் ஊடக பிரிவுக்கு  நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவின் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த  நிலையில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு நெருங்கிய நான்கு பேர் மாத்திரமே ஊடக செயற்பாட்டுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஊடக பிரிவில் நூற்றுக்கு 90 வீதமான அதிகாரம் ராஜபக்ஷகளிடமே சென்றடைந்துள்ளன.

இந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகபிரிவுக்காக வார இறுதி பத்திரிகை ஒன்று வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் வாரம் ‘இரிதா’ என்ற பெயரில் இந்த பத்திரிகை சந்தைக்கு வரவுள்ளது. பசில் ராஜபக்ஷவின் திட்டம் மற்றும் முதலீடு ஆகியவை இந்தப் பத்திரிகைக்குக் கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் அப்போதைய ஊடக பிரிவில் செயற்பட்ட மொஹான் சமரநாயக்க மற்றும் இரும்பு மோசடி தொடர்பில் பிரபலமான சுதர்மன் ரந்தலியகொட ஆகியோரிடம்ட இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த பத்திரிகைக்காக ராஜபக்சஷகளின் கறுப்பு பணம் முதலீடு செய்யப்படவுள்ளதாகவும், ஆனால், அதனை  வேறு நபரின் முதலீடாகக் காட்டுவதற்கு ராஜபக்ஷவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்