மஹிந்தவுக்கு அரச மாளிகை

🕔 April 8, 2016

Mahinda - 055முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டிற்காக அரச மாளிகையொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பொது நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான மாளிகையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணமொன்றில், இது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டுக்காக 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியன்று, குறித்த மாளிகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பீ 106ஆம் இலக்கத்தைக் கொண்ட மாளிகையே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் , அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்