மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த ராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலகுமாறு, ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிணங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த 89 பேரைக் கொண்ட ராணுவ அணி, தமது பணியிலிருந்து விலகுகிறது.
யுத்த காலத்திலிருந்து மகிந்த ராஜபக்சவுக்கு ராணுவ வீரர்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கேணல் மகேந்திர பெனான்டோ என்பவர், மேற்படி ராணுவ அணிக்குப் பொறுப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, மஹிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், அதனை அரசாங்கம் திருத்தி வழங்கவில்லை என்று, மஹிந்த தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, அவருக்கான ராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.