ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு

🕔 April 1, 2016

Maithiri - 012னாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தவில்லை என்றும், சாதாரண பயணிகள் விமானத்திலேயே சென்று வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

“நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அரசியல்வாதிகளைப்போன்று அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.

வருடாந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்கு வருடத்தின் ஆரம்பம் முதலே பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தையும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிதி ஒழுக்கமும் சிறந்த முகாமைத்துவமும் பேணப்பட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரிஷாட் பதியூதின், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்