சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது
சாவகச்சேரி – மறவன்புலோ பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர், கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறவன்புலோ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று புதன்கிழமை பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து கைதானார்.
எட்வின் (வயது 31) என்ற நபர் – இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.