எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

🕔 March 21, 2016

Hasan Ali - 097– ஏ.ஆர்.ஏ. பரீல் –

னது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை.

என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்சின்னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

என்னைக் கட்­சி­யி­லி­ருந்தும் விலக்கி விட்­ட­தாக ஒரு சிலர் வதந்­திகள் பரப்­பி­னாலும் விலக்கி விட்ட­தாகக் கூறி எனக்கு இது­வரை கடிதம் அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பால­மு­னையில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய மாநாட்டில் கட்­சியின் செய­லாளர் நாயகம் ஹசன் அலி கலந்து கொள்­ளாமை குறித்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘அதி­கா­ர­மில்­லாத ஒரு மேடையில் ஏறுவதற்கு அரு­கதை இல்லை என்­பதை உணர்ந்தேன். மேடையில் அதி­கா­ர­மற்ற வெறும் ஜட­மாக அமர்ந்­தி­ருக்க நான் விரும்­ப­வில்லை.

அதற்கு எனது மனச்­சாட்சி இட­ம­ளிக்­கவும் இல்லை.

இத­னாலே தேசிய மாநாட்டைப் புறக்­க­ணிக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டேன்.

என்னைப் புறந்­தள்­ளு­வ­தற்கு ஒரு கூட்டம் முயற்­சிக்­கி­றது. எனது அமை­தியைப் பயன்படுத்திக் கொண்டு செயற்­ப­டு­கி­றார்கள். தேசிய பட்­டியல் விவ­கா­ரத்தில் நான் அமை­தி­யா­கவே இருந்தேன். என்­றாலும் நான் தேசியப் பட்­டியல் எம்.பி பதவி கேட்டு சண்டை பிடிப்­ப­தாக மக்கள் மத்­தியில் தவறான கருத்­துக்­களைப் பரப்­பி­னார்கள்.

எனக்கு தேசிய பட்­டியல் எம்.பி. பதவி தரு­வ­தாகக் கூறப்­பட்­டது. அவ்­வாறு கூறி நான் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதைத் தடுத்­தார்கள். இவ்­வாறு மூன்று தட­வைகள் என்னைத் தேர்­தலில் போட்­டி­யிட விட­வில்லை. நான் தடுக்­கப்பட்டேன். அமைச்­சரின் சகோ­த­ர­ருக்கு தேசி­யப்­பட்­டி­யலில் எம்.பி.பதவி வழங்­கப்­பட்ட போதும் அதற்கு எதி­ராக நான் பிர­சாரம் செய்­ய­வில்லை அமை­தி­காத்தேன்.

எனது அமை­தியை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். அமை­தி­யாக இருந்­ததால் எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்துக் கொண்­டார்கள்.

மக்கள் என்னை நிரா­க­ரித்­தி­ருந்தால் நான் ஆறு­த­ல­டைவேன். ஆனால் மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. என்னைப் பழி­வாங்க நினைத்­தி­ருந்தால் தேர்­தலில் கள­மி­றக்கி தோற்­க­டித்து பழி வாங்­கி­யி­ருக்­கலாம். நான் மக்­களால் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. மக்கள் என்னை மதிக்கிறார்கள். மக்­களை அணு­க­வி­டாமல் திட்­ட­மிட்டு சதி செய்து விட்­டார்கள்.

நான் ஓய்வு பெற வேண்­டிய இந்தக் கடைசிக் கட்­டத்தில் என்னைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க விட்டு, இரண்டு அல்­லது மூன்று வரு­டங்கள் அதி­கா­ரத்தைத் தந்து என்னைக் கௌரவப் படுத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால் என்னைக் காலால் உதைத்து விட்­டார்கள். நாட்­டி­லுள்ள சட்டத்தின் மூலம் என்னைக் கட்­சி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றலாம்.

ஆனால் எனக்கும் மரத்­துக்­கு­மி­டையில் உள்ள உறவு சட்­டத்­துக்கும் அப்­பாற்­பட்­ட­தாகும். மரத்திலிருந்து என்னை வேறாகப் பிரித்­தெ­டுத்து விட­மு­டி­யாது.

மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்­ரப்பின் பேச்­சுக்­களை தொகுத்து நூலொன்­றினை வெளியிடவுள்ளேன். அந்த நூலினைத் தற்­பொ­ழுது எழுதிக் கொண்­டி­ருக்­கின்றேன். ஏன் மரச்சின்னத்­துடன் அஷ்­ரப்பின் கொள்­கை­க­ளினால் ஈர்க்­கப்­பட்டேன் எனும் விப­ரங்­களை நூலில் உள்­ள­டக்­கி­யுள்ளேன். தற்­போது 200 பக்­கங்கள் எழு­தி­யுள்ளேன். விரைவில் வெளி­யி­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்வேன்.

நான் யாருக்கும் அநி­யாயம் செய்ய இருக்­க­வில்லை. அப்­ப­டி­யா­னவன் நானல்ல. தேர்­தலில் என்னைப் போட்­டி­யிட வைத்து மக்களால் தோற்கடித்து பழிவாங்கியிருக்கலாம்.

ஆனால் இப்பொழுது நடைபெறுவது மறைந்திருந்து என்னைத்தாக்கி பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நிச்சயம் நியாயத்தின் பக்கம் இருப்பான் என்பதில் நான் மட்டுமல்ல மக்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்