மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர்

🕔 March 17, 2016

Niluka Ekanayake - 0989
த்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நிலுகா எகநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல மரணமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, நிலுகா எகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

நிலுகா எகநாயக்க – சுபசெத செய்திப் பத்திரிகையின் முன்னாள் ஆலோசகராகக் கடமையாற்றியதோடு, மிக நீண்ட காலமாக ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.

கெரவலப் பிட்டிய வித்தியலோக மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியினைப் பெற்றுக் கொண்ட இவர், தனது இரண்டாம் நிலைக் கல்வியை மாத்தளை விஜயா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பின்னர், தனது பட்டப் படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

இவர் ஒரு பிள்ளையின் தாயாவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்