தலைப்புச் செய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி, பண மோசடி வழக்கிலிருந்து விடுவிப்பு: விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லையாம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, டெய்சி ஃபாரஸ்ட்டை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்ற சமர்ப்பிப்புகளை நீதிபதி பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் – தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.

திறந்த நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர் இவ்வாறு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.