தலைப்புச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் – ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்தபோது சுமார் 02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், சந்தேகநபரான நாமல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, குறித்த விசாரணை தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானக் கொள்வனவுச் செயல்முறையைச் சூழவுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கிலும் அவர் அண்மையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்.

இந்த பணமோசடி விசாரணை, 2013 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.

விசாரணையாளர்கள் இவ்வழக்கு தொடர்பான சான்றுகளைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாமால் ராஜபக்ஷ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்.