தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி-யின் அனுராதபுரம் உரை தொடர்பில், CTID விசாரணைத் தொடங்கியது

பொதுஜன பெரமுனவின் பேரணி – அனுராதபுரத்தில், கடந்த 12ஆம் திகதி நடைபெற்றபோது, அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் ஆற்றிய உரை குறித்து, பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவின் (CTID) சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

குறித்த கருத்துக்கள் தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்து, சமூக ஆர்வலர் குழுவொன்றினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

கூட்டு எதிர்க்கட்சியினர் எனும் பெயரைக் கொண்ட அந்த அமைப்பின் முறை்பாட்டைத் தொடர்ந்து, இந்த விசாரணை – பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.